இன்றைய காலகட்டத்தில் சிலர் அபாயங்களைத் தவிர்க்காமல், தங்களை “திகிலுறச் செய்பவர்களாக” மாற்றிக்கொள்கிறார்கள். அதற்கான எளிய உதாரணமாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியுள்ள ஒரு வைரல் வீடியோ எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதில், ஒரு இளைஞர், சாலையின் தவறான பக்கத்தில், அதிக வேகத்தில் வரும் வாகனங்களுக்கு மிக அருகில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அந்த இளைஞர் தன் உயிர் மேல் அச்சமில்லாமல் நடந்து கொண்டதைப் பார்க்க முடிகிறது. எதிர்பக்கம் வந்த கார்களையும், பஸ்களையும் அச்சமின்றி எதிர் கொண்டு, மிக அருகில் கடந்துசெல்வதை காணலாம். ஒவ்வொரு நொடியிலும் அவர் மோதி உயிரிழப்பார் போல காணப்படும் இந்த வீடியோ, பார்வையாளர்களின் இதயத்தை பதறவைத்துள்ளது.

இந்தக் காணொளியை @ashfaque80035 என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இது மரணத்தை நேரில் வரவழைப்பது. மரணம் ஒரே முறை வரும் என எனக்குத் தெரியும், எனவே பயத்தில் மீண்டும் மீண்டும் எப்படி இறப்பது என்று எனக்குத் தெரியவில்லை”

என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வார்த்தைகளும், வீடியோவும் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த வீடியோ உண்மையா அல்லது ஏதாவது எடிட்டிங் மூலம் உருவாக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் முன்வைத்துள்ளனர். சிலர், இது AI மூலம் உருவாக்கப்பட்டதாக நம்புகின்றனர்; சிலர், இது உண்மையான திகில் சம்பவம் என உறுதியாக கூறுகின்றனர்.