மறைவுக்குப் பின்பும் மற்றவர்களுக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்து காட்டியுள்ளார் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி ராமச்சந்திரன்.

வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய ராமச்சந்திரன், தான் மறைந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த 2022-ம் ஆண்டிலேயே முறைப்படி பத்திரத்தில் எழுதித் தந்துள்ளார்.

அவரது விருப்பப்படியே, உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. ஒரு கட்சியின் நிர்வாகியாகப் பணியாற்றியதுடன் மட்டுமல்லாமல், தான் இறந்த பின்பும் சமூகத்திற்குப் பயனுள்ள முடிவை எடுத்துள்ள ராமச்சந்திரனின் இந்தச் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இந்த உன்னதமான முடிவுக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.