தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த கட்சியின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள், கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு பேனரில் விஜய் தோள் மீது விஜயகாந்த் கை போட்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில் வைரத்தை இழந்துவிட்டோம் தங்கத்தை இழந்து விட மாட்டோம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. தற்போது அந்த பேனர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.