கன்னியாகுமரி மாவட்டத்தில் மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி, இன்று (ஆகஸ்ட் 20) திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுமுறைக்கான ஈடாக, செப்டம்பர் 13-ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.