விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் விவசாயம் பார்த்து வந்தார். இவருக்கும் ஜான்சன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஜான்சன் குமரனை சரமாரியாக தாக்கினார்.

இதனால் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரனின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜான்சனை கைது செய்யும் வரை உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என கூறி ஆம்புலன்ஸை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜான்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.