தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
