நடிகர் விஷால் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக சிந்தனையுடைய மனிதரும் ஆவார். இவருடைய தாய் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மூலமாக பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருவது வருகிறார் . இந்த நிலையில் தற்போது இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் மதுக்கடை இன்று விடுமுறை என்று போர்டு வைக்கப்பட்டிருந்தும் மது பிரியர்கள் மதுக்கடையில் முன் நின்று மது வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார்கள்..

அப்போது அங்கு வரும் விஷால் ஏற்கனவே போதையில் தள்ளாடும் அவர்களிடம் மது கடை தான் விடுமுறை என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது அல்லவா எதற்காக பிரச்சனை செய்கிறீர்கள் என்று அவர்களை அடித்து விரட்டுகிறார். இந்த காட்சி உண்மையில் நடைபெற்றதா? அல்லது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ரத்தினம் படத்தில் உள்ள காட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.