ஹைதராபாத்தில் ராமநவமி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துகொண்ட அந்த தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இன்று ஹைதராப்பாத் தொகுதியில், இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாதவி லதா வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்மணி ஒருவர் அவரைப் புறக்கணித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.