தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக ஏற்கனவே கட்சியின் கொள்கைப்பரப்புப் பொதுச்செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் 5 முக்கிய மண்டலங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே தேர்தல் அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று இந்தக் குழுவிற்கு விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, மண்டலம் வாரியாக இந்தக் குழு சுற்றுப்பயணம் செய்து தொழிற்சங்கங்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாகப் பெறவுள்ளது.
‘மக்களுக்கான அறிக்கை மக்களிடமிருந்தே வர வேண்டும்’ என்ற விஜய்யின் இந்தத் திட்டம், தவெக-வின் தேர்தல் களப்பணிகளில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
