தென்னிந்தியாவை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மாநிலத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், தேனி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.