சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் தற்போது பிற்பகலில் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 90720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேப் போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 12370 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98960 ரூபாய் கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் தற்போது கிராமுக்கு 7 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 184 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 187000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது