மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, வாரணாசி, அமேதி, ரேபரேலி, காசியாபாத், கான்பூர் உள்பட 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.