தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயை பல பயனாளிகளிடமிருந்து வங்கிகள் கபளிகரம் செய்துள்ளன. நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நிமிடங்கள் கூட இல்லை. உரிமைத் தொகை பயனாளிகளின் பல தங்களை வங்கி கணக்கில் நீண்ட காலமாக கட்டாய குறைந்தபட்ச பராமரிப்பு தொகையை பராமரிக்காததால் அதற்கான அபராத தொகையை உரிமை தொகையிலிருந்து வங்கிகள் எடுத்து விட்டன.
