மகர ராசி அன்பர்களே….

இன்று வீன் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நியாயத்திற்கு கண்டிப்பாக போராடுவீர்கள். நன்மைகள் நடக்கும். சிக்கல்கள் தீர்ந்துவிடும். செய்யும் பணிகளில் நிம்மதி ஏற்படும். சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனைகள் சொல்லக்கூடும். இன்று பரிகாசத்துடன் பேசுபவர்களிடமிருந்து விலகி இருக்க பாருங்கள். சுய கௌரவத்தை பாதுகாப்பது நல்லது. திட்டம் தீட்டி எந்த ஒரு பணியிலும் ஈடுபட வேண்டும். தொழிலை இன்று நீங்கள் அற்புதமாக வழி நடத்துவீர்கள். கூட இருப்பவரையும் நன்றாக வழி நடத்துவீர்கள் உபரி பண வருமானம் கண்டிப்பாக வரக்கூடும்.

நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சிரமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கை தேவை ஓரளவு பூர்த்தியாகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இந்த நாள் உங்களுக்கு எதிலும் பயம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மன உளைச்சலுக்கு மட்டும் ஆளாக வேண்டாம். சுதந்திரமாக செயல்படும் எண்ணம் இருக்கும். எடுத்த  காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமானம் ஏற்படுத்தும் உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

தங்கு தடை இன்று பணிகளில் ஈடுபட முடியும். சங்கடமான சூழல் கண்டிப்பாக மாறும். சிந்தித்து செயலாற்றும்  நாளாக உள்ளது. அடுத்தவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கும் போது கவனம் தேவை. இன்று எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். செயல்களில் வெற்றி பெற எளிமையான வழிமுறையை கற்றுக் கொள்வீர்கள் திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். இந்த நாள் உங்களுக்கு முயற்சிகளால் முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு ஆசைகளும் கனவுகளும் நினைவாகும். கற்பனை திறன் அதிகரிக்க கூடும். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். மகிழ்ச்சி பொங்க காணப்படுவீர்கள். பெண்களுக்கு இன்று சுய கௌரவம் மேலோங்கும்.

இன்று மாணவர்களுக்கு முற்போக்கான சிந்தனை வெளிப்படும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் மிகுந்த ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியுங்கள். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்