கும்பம் ராசி அன்பர்களே…

இந்த நாள் புது முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி இருக்கும். செய்யும் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் செய்வீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக தன்னை நீங்கள் தயார் படுத்திக் கொள்வீர்கள். பேச்சில் மங்களத்தன்மை நிறைந்து காணப்படும். பணவரவு சீராக வரக்கூடும். இன்று வாழ்க்கையில் இருந்த குறிக்கீடுகள் கண்டிப்பாக மாறும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் இன்று நட்பு பாராட்டுவார்கள் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

மற்றவர்களின் ஆலோசனை கிடைக்கும் வாழ்க்கையில் வளர்ச்சி பெறுவதற்கு நல்ல சூழல் ஏற்படும். உபரி பணவருமானம் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பார்த்து பக்குவமாக பேசுவது மிக நல்லது. சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். நல்லது கெட்டதுகளில் பங்கு கொள்வீர்கள். தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய சூழல் இருக்கும் விரும்பிய உணவுகளை உண்டு  மகிழ்வீர்கள். எதிலும் கொஞ்சம் பயம் உண்டாகும்.

எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்பட்டு கண்டிப்பாக சரியாகும். சங்கடமான சூழ்நிலை கண்டிப்பாக மாறும். சிந்தித்து செயலாற்றும் நாளாக உள்ளது. அடுத்தவர்களை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனமாக இருங்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது மகிழ்ச்சி கொடுக்கும்.  இன்று வெற்றி காண்பீர்கள் நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி இருக்கும். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும்

இன்று பெண்களுக்கு ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். திட்டம் தீட்டி வெற்றி பெறும் நாள் என்று சொல்லலாம். இன்று  மாணவர்கள் பதட்டம் கொள்ளாதீர்கள் பரபரப்பு கொள்ளாதீர்கள் கல்வி மீது முழு அக்கறை இருக்கும் நன்கு படித்து முன்னேற  வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் முயற்சி பண்ணால் வெற்றி நிச்சயம்.

மாணவர்கள் இன்று சொகுசு வாழ்க்கை வாழ முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்றைய இனிய நாளில் நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்