மீனம் ராசி அன்பர்களே….

நல்ல எண்ணங்கள் உயர்வான எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொடுக்கும். சிலர் உங்களிடம் பரிகாசத்துடன் பேசுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் விலகி இருக்க பாருங்கள் சுய கவுரவத்தை பாதுகாப்பது ரொம்ப நல்லது தொழில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் குடும்பத்திற்கான பண செலவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும் பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள் குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதையும் கூடிவிடும்.  நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். அதிகாரமிக்க செயல்களை செய்து இன்று பாராட்டுகளை பெறுவீர்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள் தவறான ஆலோசனையை சொன்னவர்கள் இப்போது தலைகுனிவார்கள். உங்கள் நல்ல மனதை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

திட்டமிட்டு எதையும் நீங்கள் செய்ய பாருங்கள் உணர்ச்சி பொங்க பேசுவீர்கள். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு லாபம் ஈட்ட முடியும். நிலம் தொடர்பான பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். அதை சரியான பாதையில் மட்டும் எடுத்துச் செல்லுங்கள். முன் கோபம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனை குறையும். பெண்கள் இன்று ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.  காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

சிந்தித்து செயலாற்றுங்கள், வெற்றி நிச்சயம். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருப்பார்கள். கல்வி பற்றிய புரிதல் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கட்டும். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்