தனுசு ராசி அன்பர்களே….

தயவுசெய்து எதிலும் குழப்பமடைய வேண்டாம். கண்டிப்பாக சிரமங்கள் தவிர்ப்பதற்கு கூடுமானவரை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பேச்சில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். சிரமங்களை தவிர்க்க கொஞ்சம் தாமதமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். தவறில்லை சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நல்லவரிடம் கொஞ்சம் பார்த்து பக்குவமாக பேசுங்கள். நல்ல நண்பர்கள் கூட தேவையில்லாத விஷயங்களால் மன கசப்பு ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சூழல் இருக்கிறது.

சந்திராஷ்டமம் இன்னும் முடியவில்லை. அதனால் மன வருத்தம் கொள்ள வேண்டாம். மனக்குழப்பம் அடையாதீர்கள். வியாபாரத்தை நீங்கள் கொஞ்சம் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் அளவான மூலதனமே போதுமானது. தொழில் வியாபாரத்தில் ஊழியரிடம் கொஞ்சம் பார்த்து பக்குவமாக பேச வேண்டும். சுயதொழில் புரிபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிக உழைப்பு வெளிப்படக்கூடும்.

பணவரவு சிறப்பாகத்தான் இருக்கும். சிலர் வீடு வாகன பாதுகாப்பில்  கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் சங்கடமான சூழல் ஏற்படும். சமாளித்து முன்னேற கூடிய திறமை இருக்கிறது. இந்த நாள் எதையும் நீங்கள் தீர்க்கமாக யோசியுங்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். சிலருக்கு நெடுநாள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும். லட்சியங்கள் கூட கை கூடும். ஆனால் சந்திராஷ்டமம் இருக்கும் காரணத்தினால் சில விஷயங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும். குழப்பத்திற்கு ஆளாக கூடும்.

மனதை அமைதியாக வைத்து விட்டால் சந்திராஷ்டம தினங்களில் கூட வெற்றி கிடைக்கும். நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் நடக்கும் நிதானம் என்பது வேண்டும். தியானம் போன்றவற்றில் கவனம் எடுப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் ஓரளவு தான் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வரக்கூடிய சூழல் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. பெண்கள் நிதி சார்ந்த விஷயங்களை ரொம்ப தெளிவாக குழப்பம் இல்லாமல் அணுகுங்கள். எந்த செயலிலும் யோசித்து ஈடுபடுங்கள். அவசரப்பட வேண்டாம். காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும்.

இன்று மாணவர்கள் யோசித்து செயலாற்றுங்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்லுங்கள். பேச்சாற்றல் வெளிப்படும் சூழல் உள்ளது. சில வாய்ப்புகளை நீங்கள் அற்புதமாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். உணர்வுபூர்வமாக நடந்து கொள்வீர்கள். விழிப்புணர்ச்சியோடு நடந்து கொள்வீர்கள். ஆனால் முன் கோபம் பாதிப்பை ஏற்படுத்தும் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அப்படியே இன்று நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் மஞ்சள் நிறம்