விருச்சிக ராசி அன்பர்களே….

இன்று மிகவும் அற்புதமாக செயல்பட்டு வெற்றி வாகை சூட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். உங்களின் பேச்சில் மங்களத்தன்மை நிறைந்து காணப்படும். தொல்லை கொடுத்தவர்கள் இடமாறி செல்வார்கள். தொழில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும் . அதிக பணவரவில் கொஞ்சமாக சேமிப்பீர்கள். அரசு தொடர்பான உதவிகளும் கிடைக்கும் .

இன்று  தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். சிறிய பிரச்சினைகளை சந்தித்தாலும் அதை வெற்றிகரமாக உங்களால் முடிக்க முடியும். தடைகளை தாண்டி முன்னேறியும் செல்ல முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியே முதலில் முடிக்க என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் புது ஒப்பந்தம் எடுக்கும் போது கவனம் வேண்டும். லாபம் கண்டிப்பாக இருக்கும்.

இன்று கடின உழைப்பு உங்களை வெற்றியாளராக மாற்றி அமைக்கும் .உங்கள் வெற்றிக்கு அனைவரும் பக்கபலமாக இருப்பார்கள். சிறு சிக்கல் ஏற்பட்டாலும்  கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களை நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க முடியும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். நிதி சம்பந்தப்பட்ட தெளிவு இருக்கும். கொடுக்கல் வாங்கல்களை சீர்படுத்திக் கொள்ளுங்கள். எண்ணம் போல் வாழ்க்கை அமையும்.

இன்று பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். காரியங்கள் கைகூடும் இன்பத்தைக் கொடுக்கும். பெண்கள் இன்று சுதந்திர எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக அழகும்  கூடிவிடும்.  இன்று மாணவர்கள் சிக்கல்கள் கண்டிப்பாக தீரும். தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற முடியும். மாணவர்களுக்கு இன்று பெரும் மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சாதிக்க முடியும். பிடித்தமான கல்வியும் அமையக்கூடும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்றைய தினம் நந்தீஸ்வரர் மற்றும் சிவபெருமானை வழிபட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுவது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை    :   வடக்கு

அதிஷ்ட எண்    :  6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்