ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சுவிட்சர்லாந்து அந்நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
தாங்கள் நடுநிலையான நாடு என்றும், போரை ஊக்குவிக்கும் விதமாக எந்த நாட்டுக்கும் ஆயுதங்களை வழங்க முடியாது என்றும் சுவிட்சர்லாந்து அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஈரான் உடனான மோதல் முடியும் வரை அமெரிக்காவிற்கு ராணுவ தளவாடங்களுக்கான ஏற்றுமதி உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று அந்நாடு தெளிவுபடுத்தியுள்ளது.
மறுபுறம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடியுள்ளார்.
இருப்பினும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் போரை நிறுத்தாமல் இதில் பங்கேற்க முடியாது என பின்வாங்கியுள்ளன. இதனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது முக்கிய நட்பு நாடுகளின் ஆதரவை இழந்து தனித்து விடப்பட்டுள்ளது.
