உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிகந்திரராவ் காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், பெற்ற தாயையே சொந்த மகன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மது போதைக்கு அடிமையான 25 வயதுடைய விஜய் (என்ற) பப்பு என்பவனே இந்த பாதகச் செயலைச் செய்துள்ளான்.
கடந்த ஆகஸ்ட் 27 அன்று இரவு, போதையில் வீட்டிற்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், தனியாக இருந்த தனது 63 வயது விதவைத் தாயிடம் அத்துமீறியுள்ளான். தாய் அதைத் தடுத்து எதிர்த்தபோது, அவரது கைகளையும் கால்களையும் துணியால் கட்டி, அலற முடியாதபடி வாயில் துணியைத் திணித்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளான்.
நடந்த இக்கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்து போன அந்தத் தாய், நொய்டாவில் பணியாற்றும் தனது மற்றொரு மகனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக ஊருக்கு வந்த மூத்த சகோதரன் சிகந்திரராவ் காவல் நிலையத்தில் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட ஹத்ராஸ் காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட மகனைக் உடனடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதும், சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
UP क़े हाथरस जनपद में सिकंदराराऊ क़े एक युवक (23) ने नशे में अपनी 63 वर्ष की माँ को ही हवस का शिकार बना लिया। पुलिस ने रेप क़े इस गंभीर आरोप को अरेस्ट करके जेल भेजा है। — पंडित Er L K Niranjan यदुवंशी (बड़े भैया) (@Nirajbabu121) August 30, 2026 “>
आरोपी अपराधिक मानसिकता का है।
कुछ माह पूर्व ही जेल से छूट कर आया था! pic.twitter.com/7J8FwjLS3T
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மருத்துவ அறிக்கைகள் மற்றும் போதிய ஆதாரங்களைச் சேகரித்து, குற்றம் சாட்டப்பட்ட நபருக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
