உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புது அப்டேட்டை மெட்டா வெளியிட இருக்கிறது. அதாவது குரூப் கால் தொடர்பான வசதியில் ஒரு புது அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறதாம். அதாவது தற்போது whatsappபில் குரூப் கால் பண்ணும் போது அந்த குரூப்பில் உள்ள அனைவருக்கும் போன் போகும்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்படும் பொது அம்சத்தில் நீங்கள் குரூப் கால் செய்யும்போது நீங்கள் விரும்பும் மற்றும் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே போன் போகும். நீங்கள் குரூப் கால் செய்யும்போது அதில் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் நாய்க்குட்டியின் மூக்கு மற்றும் காதுகள் போன்ற வேடிக்கையான எமோஜிகளும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
