உலக அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் எலான் மஸ்க். இவர் உலகின் நம்பர் ஒன் பில்லியனர்களில் ஒருவராக திகழும் நிலையில் டுவிட்டர் செயலியை வாங்கியதன் பிறகு பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பிறகு எலான் மஸ்க் எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்த நிலையில் அடிக்கடி அதில் பதிவேற்றப்படும் பதிவுகளுக்கு ரியாக்ட் செய்வார். முன்னதாக எக்ஸ் டிவி அறிமுகப்படுத்தப்படும் என்று மஸ்க் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது விரைவில் X Mail-ஐ அறிமுகப்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

அதாவது எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் விரைவில் X MAIL வந்தால் நல்லா இருக்கும் என்று கூற அந்த திட்டமும் இருக்கிறது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் x மெயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆப்பிள் மெயில் மற்றும் ஜிமெயில் போன்றவைகள் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் நிலையில் xமெயில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஆப்பிள் மற்றும் google நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எக்ஸ் மெயிலை விரைவில் மஸ்க் அறிமுகப்படுத்தவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.