தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதை திருப்திகரமானதாக இல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு தற்போது மகிழ் திருமேனியை புது இயக்குனராக கமிட் செய்துள்ளனர்.

நேற்று அஜித்தின் அலுவலகத்தில் வைத்து ஏகே 62 படத்தின் பூஜை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஏகே 62 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.‌ இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மீண்டும் நடிகர் அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.