தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனு விக்னேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மெல்ல திறந்தது கதவு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி, ஆண்டாள் அழகர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல தொடர்களில் நடித்தார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருகிறார். நடிகை அனு விக்னேஷ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகை அனுவுக்கு கடந்த 20-ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தன்னுடைய குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அனு கூறியுள்ளார். மேலும் நடிகை அனுவுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Anu ? (@anu_vignesh_)