தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் ஷாலினியை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து உடையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகை ஷாலினியுடன் இருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை சென்னை எப்.சி அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.