தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதை அரசின் செயலாக உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளது.

அதற்கு நிதி நிலையை காரணம் காட்டி உள்ளது. தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு திமுக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதே திமுக அரசின் செயலாக இருந்து வருகிறது. இந்திய அளவில் மிக குறைந்த முதலீடு தமிழகத்திற்கு தான் வந்துள்ளது. முதல்வர் துபாய் சென்று வந்த பிறகு 6000 கோடி ரூபாய் முதலீடு இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழக ஒட்டுமொத்த கடன் தொகை 8.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும் இதில் 40 சதவீதம் திமுக ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டுள்ளது எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.