சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்களைப் பார்த்தால் சிரிப்பு வரும்; சிலவற்றைப் பார்த்தால் கோபமே வரும். இப்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவியுள்ளது.

அதில் ஒரு பெண் தன் கேமராவால் ஒரு விசித்திர சந்தையை காட்டுகிறார் . அங்கு காய்கறிகள், பழங்கள் அல்லது மீன், கோழி போன்றவை இல்லை. மாறாக, முதலை விற்கிறார்கள்.

ஆம், இது தாய்லாந்தில் உள்ள சந்தை. அங்கு மக்கள் முதலை சாப்பிடுவதால், அது அங்கு பொதுவான உணவாகவே உள்ளது. வீடியோவில் பெண் கேமராவை சுற்றி நகர்த்துகிறார் . அப்போது அங்கு கிடக்கும் முதலைகளை கண்டு அந்த பெண்ணிற்கு  அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்  கூறுகிறார்: “நான் தாய்லாந்துக்கு வந்திருக்கிறேன். இங்கு முதலை விற்கிறார்கள்.”

 

View this post on Instagram

 

A post shared by Sanjhalika Shokeen (@sanjhalika)

மேசையில் வைத்திருக்கும் முதலைகளைக் காட்டி, “இவற்றின் உடல் மக்கள் சாப்பிட்டுவிட்டார்கள்; தலைகள் சுவர் அலங்காரத்துக்கு வைத்திருக்கிறார்கள்” என்று விளக்குகிறார். ஒரு வியாபாரி அவரிடம் , “எந்த முதலை சாப்பிடுவீர்கள்?” என்று கேட்க, அவர்  பயந்து மறுத்துவிடுகிறார்.

அங்கு முதலை பற்களும் விற்கப்படுகின்றன என்றும் கூறுகிறாள். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘sanjhalika’ என்ற ஐடியில் பதிவிடப்பட்டது. இதை 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.