விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது பேசிக் கொண்டிருந்த ராமர் திடீரென பிரியங்காவின் உடையில் கை வைத்துள்ளார்.

இதனைப் பார்த்து அறந்தாங்கி நிஷா உடனடியாக ராமரை அடித்தார். ராமர் விளையாட்டு செய்த இந்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் இப்படி ஒரு தவறான செயலை ராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என கூறி வருகின்றனர். தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.