நாட் டுடே, வைல்டுஃபிளவர் உள்ளிட்ட படங்களில் நடித்த  பிரபல ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (35), அவருடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த இவர், கடந்த சில மாதங்களாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில்  இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவரது மரணத்திற்கு காரணம் கொலையா? அல்லது தற்கொலையா/ என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.