தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜயின் மகன் சஞ்சய் அண்மையில் சினிமா சார்ந்த படிப்பை முடித்திருக்கின்றார். மேலும் தற்போது அவர் குறும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இயக்கத்தில் கவனம் செலுத்தும் சஞ்சய் விரைவில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

பிரபல இயக்குனரான சுதா கொங்காரா இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் சஞ்சய் ஹீரோவாக நடிக்க கேட்டிருக்கின்றாராம். விஜய் இந்த விஷயத்தை சஞ்சயிடம் கூற ஆனால் அவர் தனது இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் நடிப்பு வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கின்றாராம். இருப்பினும் சஞ்சயை படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த கதையை சுதா கொங்கரா சஞ்சய்க்காகவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றாராம்.