தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வரும் சூழலில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறிப்பாக, அரசின் வழிகாட்டுதல்களின்படி பொருப்பில்லா அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது அரசு ஊழியர்களாக இருந்து முன்னுரிமையற்ற அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இந்த ரொக்கப்பரிசு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் முன்னுரிமை அளித்து இந்தப் பரிசுகள் விநியோகிக்கப்படுகின்றன.
ஆனால், சர்க்கரை மட்டுமே வாங்கும் அட்டைதாரர்கள் மற்றும் எந்தப் பொருளும் வாங்காத ‘வெள்ளை’ நிற அட்டைதாரர்கள் இந்த இக்கட்டான சூழலில் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தகுதியான அட்டைகள் குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
