தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 ரொக்கம், வேட்டி, சேலை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் மாநில அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தேர்தலை கருத்தில் கொண்டு, ரூ.5,000 பொங்கல் பரிசை வழங்குவதன் மூலம், தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என்று அனல் கக்கும் விமர்சனத்தை முன்வைத்தார். மக்களின் வாக்குகளைக் குறிவைத்து நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினாலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு என்ற விவகாரம் மக்கள் மத்தியில் ஆழமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.