அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டத் தயாராகிவிட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரை மேலூரில் நடைபெற்ற அமமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செங்கோட்டையன் 1972 ஆம் ஆண்டு முதல் கட்சியில் இருந்த மூத்தவர் என்றும், அவர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததுடன், 50 ஆண்டு வரலாறு உள்ளவரை கட்சியில் இருந்து நீக்கிய பிறகே அவர் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

செங்கோட்டையனின் இந்த நடவடிக்கை, பழனிசாமிக்கு பாடம் புகட்டி, துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுப்பதற்கு அவர் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுவதாகவும், தலைவர்களின் படத்தை வைத்திருப்பதும், நினைவிடத்திற்குச் செல்வதும் அவரது உண்மையான மனநிலையைக் காட்டுவதாகவும் தினகரன் தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து நட்பு ரீதியாகப் பேசுபவர்கள் இருந்தாலும், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்று தன்னுடன் யாரும் பேசவில்லை என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.