முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam) திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பாஜகவின் மூத்தத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து வெளியேறிய ஓ.பி.எஸ்., பிரதமரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அப்செட் ஆனார்.
அதிமுகவின் தொடர் தோல்விகளைக் குறிப்பிட்டு, “இனியாவது திருந்த வேண்டும், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக ஓ.பி.எஸ். சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்தச் சூழலில், அவர் டெல்லி சென்றுள்ளதால், அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறாரா அல்லது விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பாரா என்றப் பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.
ஓ.பி.எஸ். டெல்லி சென்றுள்ள அதே நேரத்தில், ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லிக்குச் சென்றுள்ளதால், மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணிக்குள் ஓ.பி.எஸ்ஸைக் கொண்டு வரும் முயற்சிகள் ஏதேனும் நடக்கிறதா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது.
