மதுரையில்ச் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாகப் பரவும் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார்.

அண்ணாமலை தங்கள் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் என்றும், அவர் நிச்சயமாகத் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “யார் எந்தக் கட்சிக்குச் சென்றாலும், 2026-இல் கண்டிப்பாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் (NDA) ஆட்சியமைக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்றக் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று நயினார் நாகேந்திரன் மறுத்தார். எடப்பாடி தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் எப்போதும் கூட்டணியைப் பொறுத்துத்தான் ஆட்சி அமையும் என்று சொல்ல முடியாது என்றும், எம்.ஜி.ஆர். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றச் சரித்திரத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக-வின் ஆட்சி மீதுள்ள எதிர்ப்புக் கோரிக்கைகள் அனைத்தும் பாஜகவுக்குத்தான் வரும் என்று கூறிய நயினார் நாகேந்திரன், பீகாரில் நிகழ்ந்ததுபோல இங்கும் மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.