உத்தரப்பிரதேச மாநிலம், மருத்துவமனைக்கு, 17 வயதுச் சிறுமியை அவரது தாய் நேற்று முன்தினம் காலை 6:45 மணியளவில் வயிற்று வலி எனக் கூறி அழைத்து வந்தார்.
ஆரம்பத்தில், ‘கர்ப்பம் இல்லை’ என தாய் மறுத்தபோதும், சிறுமியின் நிலையைப் பார்த்த மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது காலை 7:15 மணியளவில், அந்தச் சிறுமிக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது.
இந்த எதிர்பாராத பிரசவத்தால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரசவத்திற்குப் பிறகு தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் மாவட்டப் பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அண்டை வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சிறுமிக்குத் தொடர்பு இருந்ததாகவும், கர்ப்பமான விவரத்தை அவர் குடும்பத்தினரிடம் மறைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
