அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை (Overconfidence) எப்போதும் ஆபத்தில்தான் முடியும் என்பதற்குச் சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் ஓடும் பைக்கின் மீது தலைகீழாக நின்றபடி ஸ்டண்ட் செய்து தனது ‘ஹீரோயிக்’ காட்டுகிறார். ஆரம்பத்தில் அவர் பைக்கை நன்றாகக் கட்டுப்படுத்துவது போலத் தோன்றினாலும், சாலையின் முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறார். அடுத்த சில நொடிகளில் அந்த பைக் முன்னே சென்ற மற்றொரு பைக் மீது பயங்கரமாக மோத, அந்த வாலிபர் அப்படியே சாலையில் தூக்கி வீசப்படுகிறார். ஒரு நொடி கவனக்குறைவால் அவரது ஸ்டண்ட் ஆசை மண்ணோடு மண்ணாகிப்போனது.
ओवरकॉन्फिडेंस में खुद को स्टंट का बादशाह समझ रहा था
रोड ने बोला आ बेटा रियलिटी दिखाती हूँ
एक झटका लगा और सारी हीरोगिरी निकल गई
स्टाइल जमीन पर इज्जत हवा में उड़ गई
😂😂 pic.twitter.com/oRr3zCU2Sy— Er. Aamir malik (@AamirMalick605) February 8, 2026
இந்தக் காட்சியைப் பின்னால் காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர, அது தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “ஸ்டண்ட் செய்கிறேன் என்ற பெயரில் தனது உயிருக்கு மட்டுமில்லாமல், சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் இவர்கள் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘ஹீரோவாக’ மாற நினைத்த வாலிபர், இப்போது ஒரு மோசமான விபத்தின் மூலம் பலருக்கு ஒரு பாடமாக மாறியுள்ளார். சாலையில் ஸ்டண்ட் செய்வதை விட, பாதுகாப்பாகச் செல்வதே உண்மையான கெத்து என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
