தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது, தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய்யை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பி அவையை அதிரவைத்தார்.

“முதலமைச்சர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாகச் சென்ற அந்த மர்ம நபர் யார் என்பதைப் பேரவையில் வெளிப்படையாக விளக்க வேண்டும்” எனப் பிரேமலதா ஆவேசமாக வலியுறுத்தினார். மேலும், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதைக் கடுமையாகச் சாடிய அவர், “உங்களுக்கு ஜோதிடர் ராஜ குருவாக இருந்தால் அவரைத் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள்; அவருக்கு எதற்காக அரசுப் பதவி வழங்கப்பட்டது?” என வினவியதுடன், இந்த நடவடிக்கையைத் தேமுதிக வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். பிரேமலதாவின் இந்த ‘பகீர்’ கிளப்பும் கேள்விகளால் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அனல் பறந்தது.