சீனாவில் கடந்த மார்ச் 9, 2026 அன்று நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், சிறுமி ஒருவர் தனது வீட்டில் கைபேசியில் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் போன் திடீரென வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது.
கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போதே பேட்டரி அதிக வெப்பமடைந்து (Overheating) இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறுமிக்கு உயிராபத்து ஏதும் ஏற்படவில்லை என்றாலும், போன் வெடித்த வேகம் அங்கிருந்தவர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
2026年3月9日,一小女孩在家用华为手机玩游戏,手机出现爆燃。 pic.twitter.com/zL2FyNg2LK
— Daniel Fang (@fang_danie121) March 11, 2026
“>
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கைபேசி தயாரிப்பு நிறுவனம இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பேட்டரி தரம் மற்றும் அதிக நேரம் கேம் விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை இந்தச் சம்பவம் கிளப்பியுள்ளது.
