இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை லெப்ட்மென்ட் ஆஷா சஹாய் பாட்னாவில் காலமானார். இவருக்கு 97 வயது ஆகிறது. ஜப்பானில் பிறந்த ஆஷா நேதாஜியால் ஈர்க்கப்பட்டு 17 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவில் லெப்டின்ட்டாக வேலை பார்த்தார்.

இவரது தந்தை நேதாஜிக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார். நாளை 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில் ஆஷா சஹாயின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.