சென்னை: ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத் தொடங்கினார். காலப்போக்கில், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகள் அவரது இல்லத்துக்கு வந்து உணவு உண்டன.
கேமரா பழுதுபார்ப்பதில் அவரின் தேர்ச்சி காரணமாக ‘கேமரா ஹவுஸ் சேகர்’ என்றும், பறவைகளுக்கு காட்டிய அன்பினால் ‘பறவை மனிதர்’ என்றும் பொதுமக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
மேலும் சேகர் மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
