பத்து மாதம் சுமந்து ஆளாக்கிய தாயையே பாரமென நினைத்து வீட்டை விட்டு துரத்திய மகனின் செயல், மனிதநேயத்தையே அசிங்கப்படுத்தியுள்ளது. தான் ஆசையாய் வளர்த்த மகனே தன்னை அநாதையாக நடுத்தெருவில் விட்டதை தாங்கிக்கொள்ள முடியாத அந்தத் தாய், வாழ்க்கையே வெறுத்து தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சொந்த ரத்தமே கைவிட்டு, சாகத் துணிந்த அந்தத் தாயின் கதறல் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.

​ஆனால், ரத்தம் பகிர்ந்த மகன் சாகச் சொன்ன இடத்தில், முன்பின் தெரியாத ஒரு லோகோ பைலட் அந்தத் தாய்க்கு கடவுளாக வந்து உயிர்கொடுத்துள்ளார். தண்டவாளத்தில் தாய் கிடப்பதைக் கண்டு, மின்னல் வேகத்தில் செயல்பட்டு ரயிலை அவர் நிறுத்திய விதம் ஒரு உயிரை மீட்டெடுத்துள்ளது.

பெற்றவர்களைச் சுமையாக நினைக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பிள்ளைகள் முதுமையில் ஊன்றுகோலாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்காதீர்கள்!