சாலையில் வாகனம் ஓட்டும்போது தவறு செய்பவர்கள் மன்னிப்பு கேட்பது தான் முறை. ஆனால், ஒரு பெண் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு, அவரே பாதிக்கப்பட்டவர் போல நாடகமாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் ஓட்டுநர் தனது காரால் ஓரமாக நின்றிருந்த பைக்கின் மீது பலமாக மோதி தள்ளுகிறார். விபத்தை ஏற்படுத்தியவுடன் கீழே இறங்கிப் பேசாமல், அங்கிருந்து நைசாக நழுவ முயன்ற அந்தப் பெண்ணை பைக் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் துரத்திச் சென்று வழிமறிக்கின்றனர்.
காரை மறித்த இளைஞர்களிடம் சமாதானமாகப் போகாமல், அந்தப் பெண் அவர்களிடமே எகிறித் குதித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
Road-Rage Kalesh b/w a Lady driver and some guys after she hit a Bike
pic.twitter.com/eUFc8dwcPC— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 3, 2026
தவறு தன் பக்கம் இருந்தும், “நீ ஏன் அங்கே பைக்கை நிறுத்தினாய்?” என்பது போல அந்த இளைஞர்களையே கேள்வி கேட்டு அதிர வைக்கிறார்.
சிறிது நேரத்தில் அங்கே ஒரு போலீஸ்காரர் வந்தும் அந்தப் பெண்ணின் ஆட்டம் அடங்கவில்லை. மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியவுடன், லாவகமாகத் தனது காரை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இந்த ஒட்டுமொத்த ‘ஹை-வோல்டேஜ்’ டிராமாவையும் அந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
