பெங்களூருவின் கே.ஜி. ஹள்ளி பகுதியில் (KG Halli) இரண்டு சிறுவர்கள் இணைந்து ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் இருந்த பல்பைத் திருடிய விசித்திரமான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அதில் ஒரு சிறுவன் மற்றொருவனின் கழுத்தின் மீது அமர்ந்து கொள்கிறான். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் ஏதோ செல்போனில் கேம் விளையாடுவது போலவே தோன்றுகிறது.
CCTV in Bengaluru’s KG Halli captures two youths in a bizarre theft: one sits on the other’s neck pretending to play a game while stealing an external building bulb!
Be Aware innovative tactics are being used by thieves these days. Stay vigilant and secure your property!… pic.twitter.com/7FTaUXEX53— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) April 5, 2026
ஆனால், கழுத்தின் மேல் அமர்ந்திருந்த சிறுவன் மிகவும் லாவகமாக மேலிருந்த பல்பைக் கழற்றித் திருடுகிறான். சிறுவர்களின் இந்த நூதனமான முறை அப்பகுதி மக்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. “திருடர்கள் இப்போது மிகவும் நவீனமாகவும், விசித்திரமாகவும் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர், உங்கள் உடமைகளைப் பாதுகாப்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருங்கள்” என இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
