சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியைக் காண வந்த நடிகர் ஜெய்யை, விஜய் ரசிகர்கள் திடீரெனச் சூழ்ந்துகொண்டு “Vote for TVK” என முழக்கமிட்டனர். இந்த எதிர்பாராத சூழலில் சற்றும் தயங்காத ஜெய், அப்படியே விஜய் பாணியில் ரசிகர்களுக்குப் ‘பறக்கும் முத்தம்’ கொடுத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

​சமீபகாலமாக விஜயைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், அவருடன் ‘பகவதி’ படத்தில் தம்பியாக நடித்த ஜெய் காட்டிய இந்த அன்பு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான சூழலிலும் தனது நட்பையும் ஆதரவையும் ஜெய் வெளிப்படுத்திய விதம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.