மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ராபிடோ (Rapido) ஓட்டுநர் ஒருவர் சேவை வழங்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் வீல் சேரை (Wheelchair) காரில் ஏற்ற முடியாது என்று கறாராகக் கூறிய ஓட்டுநர், அவர் கூறிய எந்த விளக்கத்தையும் காது கொடுத்துக் கேட்கக் கூடத் தயாராக இல்லை. ​அனைவருக்கும் பொதுவான ஒரு சேவை நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை இப்படிப் பாரபட்சமாக நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் எனப் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

“அந்தப் பெண்ணின் நிலையைப் புரிந்து கொண்டு ஒரு சிறு உதவியைக் கூடச் செய்ய அந்த ஓட்டுநருக்கு மனமில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ராபிடோ நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் இந்தக் கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.