பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண், நள்ளிரவு 3 மணியளவில் விமான நிலையத்திலிருந்து காடுகோடி பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவரது வீடு வெறும் 3 கி.மீ தொலைவில் இருந்ததால், எந்த ஒரு ஆன்லைன் டாக்ஸியும் வரச் சம்மதிக்கவில்லை. ஆள் நடமாட்டமில்லாத அந்த நள்ளிரவு நேரத்தில் தவித்த அவருக்கு, அங்கிருந்த ஒரு பேருந்து நடத்துநர் (Conductor) துணையாக நின்று பாதுகாத்துள்ளார்.
அதன்பின்னர் வந்த ஒரு ராபிடோ ஓட்டுநர், பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அவரைப் பத்திரமாக வீட்டில் சேர்த்துள்ளார். “இவ்வளவு லேட் ஆகிடுச்சு, உங்களைப் பத்திரமா கொண்டு போய் சேர்ப்பது என் கடமை. உங்களுக்குத் தோன்றுவதை மட்டும் கொடுங்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் ஐஸ்வர்யாவை நெகிழ வைத்துள்ளது. இந்த மனிதநேயமிக்க செயலை வீடியோவாக அவர் பகிர, அது தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.
