சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 155370 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது உடனடி தேவை ஏற்பட்டால் 155370 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் புகார் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் அணியை மெட்ரோ நிர்வாகம் பணி அமர்த்தி  இருந்தது குறிப்பிடத்தக்கது.