கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். இதுதவிர ஷர்மிளாவிற்கு பல்வேறு தனியார் பேருந்துகளில் இருந்தும் வேலை அளிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் பணியை துறந்த கோவையைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பண்பாட்டு மையம் சார்பாக புதிய காரை பரிசாக வழங்கினார். இதனிடையே ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக மட்டும் இருந்துவிட வேண்டியவர் அல்ல. வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக அவர் தனது பயணத்தை மீண்டும் தொடர இருக்கிறார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.