லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் உடன் இணைவது பற்றி இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது “தளபதியும் நானும் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, விஜய்யுடன் கண்டிப்பாக இணைவேன். அந்த நேரத்தில் நான் சொல்லும் கதை அவருக்கு பிடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.